என் மலர்
செய்திகள்
X
மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த விவசாயி - 7 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்6 Sept 2016 4:51 PM IST (Updated: 6 Sept 2016 4:51 PM IST)
தூத்துக்குடி அருகே மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த விவசாயி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள குலையன்கரிசலை சேர்ந்தவர் பொன்ரத்தினராஜ் (வயது 30). விவசாயி. இவருக்கும் கூட்டாம்புளியை சேர்ந்தவர் இசக்கிபாப்பா என்பவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது.
இந்நிலையில் பொன் ரத்தினராஜ் தனது மனைவிக்கு தெரியாமல் நாசேரத் பகுதியை சேர்ந்த வயலட் (26) என்ற பெண்ணை 29.4.2016 அன்று 2-வது திருமணம் செய்துள்ளார். இந்த திருமணம் நாசரேத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் நடந்துள்ளது.
பொன் ரத்தினராஜ் 2-வது திருமணம் செய்த விவரம் சமீபத்தில் இசக்கி பாப்பாவிற்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் தனது கணவரிடம் இது குறித்து கேட்டுள்ளார். அப்போது அவருக்கு பொன்ரத்தினராஜ் கொலை மிரட்டல் விடுத்தாராம். இது தொடர்பாக இசக்கிபாப்பா தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் பொன்ரத்தினராஜ், அவரது தந்தை மகேந்திரன், தாய் அன்னப்பழம், சகோதரிகள் ஏஞ்சல், பொன்செல்வி, உறவினர்கள் ஜெயரூபி மற்றும் 2-வது மனைவி வயலட் ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

Next Story
×
X