என் மலர்
செய்திகள்
X
சேலம் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி பலியான 2 வாலிபர்கள் உடல்கள் மீட்பு
Byமாலை மலர்6 Sept 2016 5:39 PM IST (Updated: 6 Sept 2016 5:40 PM IST)
சேலம் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி பலியான இரண்டு வாலிபர்களின் உடல்களை போலீசார் மீட்டனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள பாப்பாம்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நேற்று அந்த பகுதியில் விநாயகர் சிலையை வைத்து பொதுமக்கள் வழிபட்டனர்.
சிலைக்கு பல்வேறு பூஜைகளை செய்த அவர்கள் மாலையில் ஊர்வலமாக எடுத்து சென்று தேவூர் அருகே உள்ள கல்வடங்கம் காவிரி ஆற்றில் சிலையை கரைத்தனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த மாணிக்கம் மகன் தீபக் (வயது18), சுந்தரம் மகன் சீனு (19) உள்பட பலரும் உடன் சென்றிருந்தனர்.
பின்னர் தீபக், சீனு உள்பட பலர் காவிரி ஆற்றில் குளித்தத போது 2 பேரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். ஆனாலும் 2 பேரையும் தண்ணீர் இழுத்து சென்றது.
இதையடுத்து பொதுமக்களும், தேவூர் போலீசாரும் தண்ணீரில் இறங்கி 2 பேரையும் தேடினர். ஆனால் இரவு வரை அவர்கள் 2 பேரின் கதி என்ன என்பது தெரியாமல் இருந்தது.
இந்த நிலையில் இன்று காலை மீண்டும் போலீசாரும், அந்த பகுதி பொதுமக்களும், உறவினர்களும் காவிரி ஆற்றில் 2 பேரும் காணாமல் போன இடம் அருகே இறங்கி தேடினர்.
அப்போது மாயமான 2 பேரும் தண்ணீரில் மூழ்கி இறந்ததும், அவர்களது உடல் அங்குள்ள பாறை இடுக்கில் சிக்கி இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேர் உடலையும் பொதுமக்கள் உதவியுடன் போலீசார் மீட்டு வெளியில் கொண்டு வந்தனர். இறந்த 2 பேரின் உடலையும் பார்த்து அவரது உறவினகள் கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
பின்னர் அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் 2 பேரின் உடல்களும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
தண்ணீரில் மூழ்கி இறந்த 2 பேரும் விசைத்தறி தொழிலாளர்கள் ஆவர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தேவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story
×
X