என் மலர்
செய்திகள்
X
திருவள்ளூர் வேட்பாளர் மாற்றம்: அ.தி.மு.க வட்ட செயலாளர் குடும்பத்துடன் மறியல்
Byமாலை மலர்3 Oct 2016 12:10 PM IST (Updated: 3 Oct 2016 12:10 PM IST)
திருவள்ளூர் வேட்பாளர் திடீரென மாற்றப்பட்டதால் அ.தி.மு.க வட்ட செயலாளர் குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டார்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் 21-வது வார்டு அ.தி.மு.க வட்ட செயலாளர் குமரவேல் இவரது மனைவி ராஜேஸ்வரி. தற்போது ராஜேஸ்வரிக்கு 21-வது வார்டில் நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட அ.தி.முக. சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று மாலை திருவள்ளூர் மாவட்ட அ.தி.மு.க பிரமுகர்கள் சிலர் ராஜேஸ்வரியிடம் வந்து உங்களுக்கு பதிலாக அதே பகுதியை சேர்ந்த நளினி ராஜன் தான் 21 வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுகிறார் என்று கூறினார். அதனால் நீங்கள் இந்த முறை கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட கூடாது என்றும் கூறினார்.
இதனால் மன வேதனை அடைந்த ராஜேஸ்வரி தனது கணவர் குமரவேல், மகள் புங்குழலி மற்றும் ஆதரவாளர்கள் 50 பேருடன் சென்று இன்றுகாலை திருவள்ளூர் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் செய்தார்.
தகவல் அறிந்ததும் திருவள்ளூர் டவுன் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சு வார்த்தைக்கு உடன்படாததால் லேசாக தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இது தொடர்பாக குமரவேலை கைது செய்தனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story
×
X