search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    களக்காடு அருகே வாழைகளை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்: நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
    X

    களக்காடு அருகே வாழைகளை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்: நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

    களக்காடு அருகே வாழைகளை காட்டுப்பன்றிகள் நாசம் செய்தன. சேதமான வாழைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கீழவடகரையில் நேற்று முன் தினம் இரவில் காட்டு பன்றிகள் வயல்களுக்குள் புகுந்தன. பின்னர் அவைகள் கீழவடகரையை சேர்ந்த விவசாயி கண்ணன் (வயது 45), மாரியப்பன் (52) ஆகியோர்களுக்கு சொந்தமான வயலில் 28 வாழைகளை நாசம் செய்தன.

    ஏற்கனவே கடந்த 23-ந் தேதி இரவில் கீழவடகரையை சேர்ந்த ராமச்சந்திரன் (42) என்பவருக்கு சொந்தமான 75 வாழைகளை காட்டு பன்றிகள் சேதப்படுத்தியது. இந்நிலையில் மீண்டும் அட்டகாசம் செய்துள்ளது.

    தற்போது நிலவும் வறட்சியின் காரணமாக விவசாயிகள் சிரமப்பட்டு பயிர்களுக்கு தண்ணீர் பாய்த்து வரும் நிலையில் வாழைகளை காட்டு பன்றிகள் நாசம் செய்து வருவதால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். சேதமான வாழைகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் கீழவடகரை தமிழ்நாடு விவசாய சங்க செயலாளர் பாலன், இந்திய கம்யூ கிளை செயலாளர் பால்ராஜ் ஆகியோர், ‘பலமுறை மனுக்கள் கொடுத்தும் வனத்துறையினர் வனவிலங்குகளை விரட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடும் வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து களக்காட்டில் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்’ இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×