என் மலர்
செய்திகள்
X
ஈரோட்டில் இன்று 2-வது நாளாக ரெயில் மறியல்: முன்னாள் எம்.பி. உள்பட பலர் கைது
Byமாலை மலர்18 Oct 2016 3:46 PM IST (Updated: 18 Oct 2016 3:46 PM IST)
காவிரி மேலாண்மை அமைக்க கோரி ஈரோட்டில் இன்று 2-வது நாளாக ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்.பி. உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
ஈரோடு:
காவிரி மேலாண்மை அமைக்க கோரி தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து 2 நாட்கள் ரெயில் மறியல் போராட்டம் நடக்கும் என அனைத்து விவசாய சங்கத்தினரும், அனைத்து அரசியல் கட்சியினரும் அறிவித்திருந்தனர்.
அதன் படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் 700-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு பிறகு விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இன்று 2-வது நாளாக ரெயில் மறியல் போராட்டம் நடத்த ஈரோடு காளை மாடு சிலை அருகே திரண்டனர்.
இதில் தி.மு.க. சார்பில் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமையிலும், ம.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தி தலைமையிலும் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மண்டல அமைப்பு செயலாளர் விநாயகமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு சார்பில் திருநாவுக்கரசு, மார்க்.கம்யூ சார்பில் முத்துசாமி, தமிழக விவசாயிகள் சங்க தலைவர் காசியண்ண கவுண்டர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் துளசி மணி ஆகியோர் தலைமையில் தனித்தனியாக ரெயிலை மறிக்க ரெயில் நிலையத்துக்கு கோஷமிட்டப்படி சென்றனர்.
ரெயில் நிலைய வாயிலை அடைந்ததும் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தி உள்பட நூற்றுக்கணக்கான பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story
×
X