search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார்: நடிகை நளினி பேட்டி
    X

    ஜெயலலிதா பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார்: நடிகை நளினி பேட்டி

    தமிழக மக்கள் கூட்டு பிரார்த்தனை செய்து வருவதால் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார் என்று நடிகை நளினி கூறினார்.

    தலைவாசல்:

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா பூரணநலம் பெற வேண்டி தலைவாசல் அடுத்த நாவலூரில் உள்ள மீனாட்சிஅம்மாள் சித்தர்பீடத்தில் இருக்கும் காமாட்சியம்மன் உடனுறை பெரியநாயகி அம்மன் கோவிலில் சிறப்பு யாக பூஜை மற்றும் 108 குத்துவிளக்கு பூஜை நடந்தது. இதற்கு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவரும், சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளருமான ஆர்.இளங்கோவன் தலைமை தாங்கினார்.

    சித்தர்பீட உபாசகர் மீனாட்சிஅம்மாள் முன்னிலை வகித்தார். இதில் நடிகை நளினி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு யாகபூஜை செய்து வழிபாடு நடத்தினார். மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். பின்னர் நடிகை நளினி நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி சிறப்பு யாகபூஜை, 108 குத்துவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு செய்தேன். தமிழக மக்கள் கூட்டு பிரார்த்தனை செய்து வருவதால் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார். மீண்டும் நலத்திட்டங்கள் வழங்கி மக்கள் பணியாற்றுவார். மக்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.

    இவ்வாறு நடிகை நளினி கூறினார்.

    யாக பூஜையில் எம்.எல்.ஏ.க் கள் மருதமுத்து, ஆர்.எம்.சின்னத்தம்பி, அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் ஜெகதீசன், மாவட்ட துணை செயலாளர் ஏ.டி.அர்ச்சுணன், தலைவாசல் வடக்கு ஒன்றிய செயலாளர் ராமசாமி, தெற்கு ஒன்றிய செயலாளர் பெரியசாமி, வீரகனூர் நகர செயலாளர் சிவகுமார் உள்பட அ.தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×