என் மலர்
செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே மனைவியை தாக்கியதாக கணவர் உட்பட 2 பேர் கைது
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகேயுள்ள பச்சிகானப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(40) விவசாயி. இவருடைய மனைவி தமிழ்செல்வி(35). இவர்களுக்கு திருமணமாகி 2ஆண் குழந்தைகள் உள்ளனர்.
தமிழ்செல்விக்கு அவரது மாமனார் 3 சென்ட் விவசாய நிலத்தை தானமாக கொடுத்துள்ளார். அதனை ரமேஷ் தனது பெயருக்கு மாற்றி தருமாறு மனைவியிடம் கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மீண்டும் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ் தனது தம்பி வடிவேலுடன் சேர்ந்து தமிழ்செல்வியை ஆபாசமாக பேசி அருகில இருந்த மரகட்டையை எடுத்து தாக்கியுள்னர். இதில் காயமடைந்த தமிழ்செல்வியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து தமிழ்செல்வி கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி டேம் போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷ் மற்றும் வடிவேலுவை கைது செய்தனர்.