என் மலர்
செய்திகள்
X
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மணல் கடத்திய லாரி பறிமுதல்
Byமாலை மலர்21 Nov 2016 5:57 PM IST (Updated: 21 Nov 2016 5:57 PM IST)
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மணல் கடத்திய லாரியை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் கக்கன்புரம் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அரசு அனுமதியின்றி திருச்சியில் இருந்து பெங்களூருக்கு 5 யூனிட் மணல் கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் லாரி டிரைவரான வேலம்பட்டியை சேர்ந்த பெருமாள்(24) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
Next Story
×
X