என் மலர்
செய்திகள்
X
பழனியில் தொழில் அதிபர் கார் கடத்தல்
Byமாலை மலர்21 Nov 2016 7:58 PM IST (Updated: 21 Nov 2016 7:58 PM IST)
பழனியில் கல்லூரி முன் நிறுத்தி இருந்த தொழில் அதிபர் காரை மர்ம நபர்கள் கடத்தி சென்று விட்டனர்.
பழனி:
பழனி லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் சண்முகபுரத்தில் நர்சிங் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும், மருத்துவ பரிசோதனை கூடமும் நடத்தி வருகிறார்.
நேற்று இவர் தனது பொலிரோ காரில் கல்லூரி அலுவலகத்திற்கு சென்றார். வெளியே நிறுத்தி இருந்த காரை மர்ம நபர்கள் கள்ளச்சாவி போட்டு கடத்தி சென்று விட்டனர்.
அலுவலக பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக வெளியே வந்த ரவிச்சந்திரன் காரை காணாமல் திடுக்கிட்டார். இது குறித்து அவர் பழனி டவுன் போலீசில் புகார் செய்தார். கடத்தப்பட்ட காரின் மதிப்பு ரூ.4¼ லட்சம் ஆகும்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தேடி வருகிறார்கள்.
Next Story
×
X