search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடன் பிரச்சினையால் மகனுடன் வி‌ஷம் குடித்த தந்தை பலி
    X

    கடன் பிரச்சினையால் மகனுடன் வி‌ஷம் குடித்த தந்தை பலி

    கடன் பிரச்சினையால் மகனுடன் வி‌ஷம் குடித்த தந்தை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை கணபதி அத்திப்பாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் கனகராஜ்(வயது 46). தனியார் நிறுவன ஊழியர்.

    இவர் பலரிடம் கடன் வாங்கியதாகவும், அதனை திருப்பிக் கொடுக்க முடியாமல் திணறி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கனகராஜ் வாழ்க்கையில் வெறுப்படைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று கனகராஜ் தனது மகன் அஸ்வினிடம்(18) கடன் பிரச்சினையில் இருந்து மீள முடியாத நிலையை கூறி உள்ளார். இதைக்கேட்டு அஸ்வினும் மனமுடைந்தார்.

    பின்னர் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து விளாங்குறிச்சி சாலையில் உள்ள பேக்கரி அருகே சாணிப்பவுடர் குடித்த நிலையில் மயங்கிக் கிடந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி கனகராஜ் இறந்தார். அஸ்வினுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×