என் மலர்
செய்திகள்
X
மதுரையில் காதல் திருமணம் செய்த பெண் தூக்கில் தொங்கினார்
Byமாலை மலர்19 Feb 2017 4:42 PM IST (Updated: 19 Feb 2017 4:42 PM IST)
மதுரையில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை வசந்தநகர் மகாலட்சுமி நகரைச் சேர்ந்தவர் வருண்பாபு. ஜவுளிக்கடை ஊழியர். இவரது மனைவி கவிதா (வயது 21)கடையில் வேலை பார்த்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இவர்கள் ஒத்தக்கடையில் பதிவு திருமணம் செய்துள்ளனர். அதன் பிறகு மகாலட்சுமி நகரில் வசித்து வந்தனர். திருமணத்திற்கு பிறகு கவிதா வேலைக்குச் செல்லவில்லை.
இந்த நிலையில் அவரை மீண்டும் வேலைக்குச் செல்லும்படி வருண்பாபு கூறினாராம். இது தொடர்பாக கணவன் -மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த கவிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இது குறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X