என் மலர்
செய்திகள்
பரமத்திவேலூர் அருகே தீ விபத்து: தென்னை மரம் எரிந்து நாசம்
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூரை அடுத்த பொத்தனூர் தெற்குத் தெருவை சேர்ந்தவர் சங்கர். இவருக்கு சொந்தமான தென்னை மரத்தில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் காரணமாக அருகில் இருந்த விறகுப் பட்டறையில் தீ விழுந்ததில் தீடீரென விறகுகள் தீ பிடித்து எரிய ஆரம்பித்தது.
வெயில் மற்றும் காற்றின் காரணமாக தீ மளமளவென எரிய ஆரம்பித்தது. உடனடியாக அருகில் இருந்தவர்கள், ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். இருப்பினும் தீ வேகமாக பரவியதால் தீயை அணைக்க முடியவில்லை. இந்த தீ விபத்து குறித்து அருகிலுள்ள கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தெரிவித்த தகவலின் பேரில் நிலை அலுவலர் கோமதி தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேகமாக எரிந்து கொண்டு இருந்த தீயை அணைத்து கட்டுப்படுத்தி தீ மேலும் பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.