என் மலர்
செய்திகள்
6-ம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை
கோவை:
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள குள்ளாபுரத்தை சேர்ந்தவர் சிவபெருமாள். கூலித் தொழிலாளி. இவரது மகள் சவுந்தர்யா (வயது 11). இவர் நரசிம்ம நாயக்கன் பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த சவுந்தர்யா தூங்கி கொண்டு இருந்தார். அப்போது தெரு பைப்பில் தண்ணீர் வந்தது. இதனை பார்த்த சவுந்தர்யாவின் சகோதரர் ஜஸ்வந்த் தண்ணீர் பிடிக்குமாறு கூறினார். ஆனால் சவுந்தர்யா மறுத்து விட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த சவுந்தர்யா வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து காரமடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட சவுந்தர்யாவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.