என் மலர்
செய்திகள்
X
சாலை விபத்துக்களில் தமிழகம் முதலிடம்: பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு
Byமாலை மலர்4 April 2017 11:01 AM IST (Updated: 4 April 2017 11:01 AM IST)
சாலை விபத்துக்களில் தமிழகம் முதலிடம் என்பது பெருமையல்ல என திருச்சியில் நடைபெற்ற விழாவில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.
திருச்சி:
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து இன்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணியை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பின்னர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பயிலரங்கம் திருச்சி சங்கம் ஓட்டலில் நடைபெற்றது. அதனை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து பேசியதாவது:-
இந்தியாவில் 50 லட்சம் கிலோ மீட்டர் சாலைகள் உள்ளது. இதில் ஒரு லட்சம் கிலோ மீட்டர் சாலைகள் தேசிய நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. மற்ற சாலைகள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த சாலைகளில் ஒவ்வொரு வருடமும் 5 லட்சம் விபத்துகள் ஏற்படுகிறது. தமிழகத்தில் மட்டும் கடந்த ஆண்டு 69 ஆயிரம் விபத்துகள் நடந்துள்ளன.
கல்வித்துறையில் இந்தாண்டு சென்னை ஐ.ஐ.டி. அகில இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது என்பது பெருமை. ஆனால் விபத்தில் முதன்மை இடம் என்பது பெருமையல்ல. கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் 75ஆயிரத்து 642 பேர் விபத்தில் இறந்துள்ளனர். 80 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். ஒவ்வொரு வருடமும் விபத்தில் காயமடைபவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் தான் 2-வது இடத்தில் உள்ளது.
இது யாரையும் குறை கூறுவதற்காக கூறவில்லை. அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். அரசு டிரைவர்கள் என்றாலும், தனியார் டிரைவர்கள் என்றாலும் வாகனங்களை கவனமாக இயக்கவேண்டும்.
72 சதவீத வழக்குகள் ஓட்டுனர்களின் கவனக் குறைவால்தான் ஏற்படுகிறது. வேகமும், கவனக்குறைவும்தான் விபத்துக்களுக்கு காரணம். பயங்கரவாதிகள் குண்டு போட்டு பொதுமக்களை கொல்வது போல, வாகனங்கள் மூலமும் விபத்தை ஏற்படுத்தி கொல்கிறார்கள். எனவே விபத்துகள் மூலம் உயிர்கள் இழப்பை ஏற்படுத்தக்கூடாது. ஒரு விபத்தில் ஒருவர் இழந்தால் அந்த குடும்பத்தில் உள்ள 5 பேர் வரை பாதிக்கப்படுகிறார்கள்.
விபத்தில் சிக்கியவர்களை அருகே உள்ளவர்கள் உடனடியாக அவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்து காப்பாற்ற வேண்டும். அவ்வாறு காப்பாற்றுபவர்களை போலீசார் வழக்கில் சேர்க்கமாட்டார்கள் என்று மத்திய அரசு சட்டம் இயற்றியது. எனவே விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவது அவர்களின் குடும்பத்தையும் காப்பாற்றுவது போல் ஆகும்.
எனவே அனைவரும் இணைந்து செயல்பட்டு விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்க வேண்டும். 2020-க்குள் விபத்துகளை 50 சதவீதமாக குறைக்க வேண்டும். திருச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 2,758 விபத்துக்கள் நடந்துள்ளன. 529 பேர் இறந்துள்ளனர். இதையும் 50 சதவீதமாக குறைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்தியாவில் வரும் 2020-ம் ஆண்டுக்குள் விபத்துகளை 50 சதவீதமாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு அனைவரின் கூட்டு முயற்சியும் தேவை. இது தொடர்பாக அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 108 ஆம்புலன்ஸ் கூடுதலாக வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நெடுஞ்சாலை மைல் கற்களில் இந்தியில் எழுத உத்தரவிட்டது, முன்பு மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலுதான். இது இந்தி திணிப்பு அல்ல. வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் தெரிந்து கொள்வதற்கு வசதியாக இது கடைபிடிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் உடனிருந்தார்.

Next Story
×
X