என் மலர்
செய்திகள்
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்று திறனாளிகள் தர்ணா போராட்டம்
திருவள்ளூர்:
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் வசந்தம் மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் லிவிங்ஸ்டன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் அங்கு வந்தனர்.
அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து, திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலெக்டர் சுந்தரவல்லி அழைத்துப் பேசினார்.
அப்போது இதில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வழங்க வேண்டும், மாற்றுத் திறனாளிகள் பிரச்சினைகளுக்கான மாவட்ட கமிட்டி மாவட்ட கலெக்டர் முன்னிலையில் நடத்தப்பட வேண்டும்.
மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.