என் மலர்
செய்திகள்
X
பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
Byமாலை மலர்4 April 2017 5:02 PM IST (Updated: 4 April 2017 5:02 PM IST)
பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு திண்டுக்கல் கோர்ட்டு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியுள்ளது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே அய்யம்பாளையம் ஏ.கே.ஜி.நகரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. அவரது மகள் காளீஸ்வரி (வயது 6). கன்னிவாடி அருகே உள்ள வெள்ளமடத்துப்பட்டியைச் சேர்ந்தவர் காசி (25). இவர் கடந்த 5.4.2011-ந் தேதி அன்று அந்த பகுதியில் நடந்த கோவில் திருவிழாவின் போது சிறுமி காளீஸ்வரியை கடத்தினார். பின்னர் பீலிக்கரடு பகுதியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார். பின்னர் உடலை அங்குள்ள புதரில் வீசிச் சென்றார்.
இது குறித்து பட்டிவீரன் பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து காசியை கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி கருணாநிதி குற்றவாளி காசிக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
மேலும் சிறுமியை கடத்திய குற்றத்துக்காக 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Next Story
×
X