என் மலர்
செய்திகள்
X
3–வது நாளாக லாரிகள் ஓடவில்லை: ரூ.15 கோடி மதிப்புள்ள பொருட்கள் தேக்கம்
Byமாலை மலர்4 April 2017 11:26 PM IST (Updated: 4 April 2017 11:26 PM IST)
குமரி மாவட்டத்தில் நேற்று 3–வது நாளாக லாரிகள் ஓடவில்லை. இதனால் ரூ.15 கோடி மதிப்புள்ள பொருட்கள் தேக்கமடைந்துள்ளதாக லாரி உரிமையாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் மனோகரன் கூறினார்.
நாகர்கோவில்:
வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் உயர்த்தப்பட்டுள்ள கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், பெட்ரோல்– டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 30–ந் தேதி முதல் தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வேலைநிறுத்தம் தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் நடந்து வருகிறது.
தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்க வேலைநிறுத்தத்துக்கு ஆதரவாக குமரி மாவட்ட லாரி உரிமையாளர்களும் கடந்த 1–ந் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 3–வது நாளாக குமரி மாவட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் ஓடவில்லை.
இதனால் பெரும்பாலான லாரிகள் நாகர்கோவில் அனாதைமடம் மைதானத்திலும், சில லாரிகள் அந்தந்த உரிமையாளர்களின் ஷெட்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எனவே குமரி மாவட்டத்தில் இருந்து உள் மாவட்டத்துக்குள்ளும், வெளி மாநிலங்களுக்கும் சரக்கு போக்குவரத்தில் பாதிப்பு பெருமளவு ஏற்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் உற்பத்தி ஆகக்கூடிய சுமார் ரூ.15 கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கமடைந்து கிடக்கிறது.
இதுதொடர்பாக குமரி மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் மனோகரன் கூறியதாவது:–
குமரி மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் மட்டும் 2,580 லாரிகள் உள்ளன. இதில் 2 ஆயிரத்து 200 லாரிகள் நேற்று ஓடவில்லை. வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு சென்ற லாரிகள் ஆங்காங்கே சரக்குகளை ஏற்றாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதேபோல் குமரி மாவட்டத்திலும் லாரிகள் அவரவர்களது ஷெட்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
எங்களது வேலை நிறுத்த போராட்டத்தால் குமரி மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றிச் செல்லப்படும் ரப்பர் ஷீட்கள், ரப்பர் மரத்துண்டுகள், தேங்காய், உப்பு, மரச்சீனி கிழங்கு, ஈர்க்கு துடைப்பம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தேங்கிக் கிடக்கின்றன. கடந்த 3 நாட்களில் மட்டும் சுமார் ரூ.15 கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கமடைந்து உள்ளன. மேலும் எங்களது கோரிக்கைகள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடமும், ஐதராபாத்தில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவன அமைப்புகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்படாத பட்சத்தில் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லக்கூடிய லாரிகளையும் எங்களது போராட்டத்தில் பங்கேற்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சமையல் கியாஸ் லாரி உரிமையாளர்களும் நேற்று முதல் இந்த போராட்டத்தில் பங்கேற்பதால் சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும்.
இவ்வாறு மனோகரன் கூறினார்.
அதேவேளையில் நாகர்கோவிலில் உள்ள தனியார் சந்தை, வடசேரி சந்தை, கோட்டார் சந்தை போன்றவற்றுக்கு வழக்கம்போல் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதனால் காய்கறிகள், மளிகை பொருட்களுக்கு தட்டுப்பாடு எதுவும் ஏற்படவில்லை.
இதுதொடர்பாக தனியார் சந்தை நிர்வாகி செல்லத்துரை கூறும்போது, “குமரி மாவட்டத்துக்கு நெல்லை, தூத்துக்குடி மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய காய்கறிகள் வழக்கம்போல் வந்து கொண்டிருக்கிறது. லாரிகளுக்கு பதிலாக மினி லாரி, சரக்கு ஆட்டோ போன்ற வாகனங்களில் வந்து கொண்டிருக்கிறது. எனவே காய்கறிகளுக்கு இதுவரை தட்டுப்பாடு எதுவும் ஏற்படவில்லை“ என்றார்.

Next Story
×
X