search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருத்துறைப்பூண்டி அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
    X

    திருத்துறைப்பூண்டி அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல்

    திருத்துறைப்பூண்டி அருகே காலி குடங்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழகத்தில் கோடை வெயில் கடுமையாக சுட்டெரிக்கும் நிலையில் பருவ மழையும் பெய்யாமல் ஏரி, குளங்கள் தண்ணீர் இல்லாமல் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்த  நிலையில் எங்கு பார்த்தாலும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு கால்நடைகளுக்கு கூட குடிக்க தண்ணீர் இல்லாமல் இறக்கும் சூழ்நிலை நிலவுகிறது.

    இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மணலி ஊராட்சியில் கடந்த ஒரு வாரமாக குடிதண்ணீர் வரவில்லை என குற்றம் சாட்டி பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் , பெண்கள் காலிக் குடங்களுடன் திருத்துறைப்பூண்டி- திருவாருர் சாலையில் உள்ள மணலி கடைத்தெருவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஊராட்சி தனி அலுவலர் புலவேந்திரனை இடமாறுதல் செய்ய வேண்டும். ஊராட்சியின் குடிநீர் பணியில் இருந்த மூன்று பேரில் ஒருவர் தான் பணியில் உள்ளார். மீதி இரண்டு பேரை புதிதாக பணி நியமனம் செய்ய வேண்டும். மணலியில் உள்ள மின்மோட்டாரை சரிசெய்து அனைவருக்கும் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி ஒன்றிய துணை ஆணையர் நமச்சிவாயம், திருத்துறைப்பூண்டி இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப் இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.

    Next Story
    ×