search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அலங்காநல்லூர் அருகே டீ மாஸ்டர் கொலை
    X

    அலங்காநல்லூர் அருகே டீ மாஸ்டர் கொலை

    கண்மாய்கரையில் டீ மாஸ்டர் முகம் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட சிக்கந்தர் சாவடியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 42). இவர் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள டீ கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று பணி முடிந்து ஊருக்கு சென்ற அவர், வீட்டிற்கு செல்லவில்லை. இந்த நிலையில் அங்குள்ள சிலையனேரி கண்மாய் கரையில்  அவர் பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது.

    இது குறித்து அவரது மனைவி மீனா (36) அலங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார்  விரைந்து சென்று கணேசன் உடலை மீட்டனர். அவரது முகம் சிதைந்த நிலையில் காணப்பட்டது. எனவே அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    அவரை எங்காவது கொண்டு சென்று கொலை செய்து உடலை  இங்கு வீசி சென்றார்களா? அல்லது கண்மாய் கரையில் வைத்துதான் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கணேசன் உடல்  பிரேத பரிசோதனைக்காக மதுரை  அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×