search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழங்காநத்தத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு
    X

    பழங்காநத்தத்தில் பெண்ணிடம் நகை பறிப்பு

    பழங்காநத்தத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பெண்ணிடம் நகையை பறித்துச் சென்றனர்.

    மதுரை:

    மதுரை பழங்காநத்தம் நேரு நகர் அகஸ்தியர் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி ஜெயந்தி (வயது 40). இவர் பசும்பொன் நகர் கண்ணதாசன் தெருவில் நடந்து சென்றார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் ஜெயந்தியை வழிமறித்து அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் சங்கிலியை பறிக்க முயன்றனர். ஆனால் நகையை பிடித்துக் கொண்டு ஜெயந்தி போராடினார். இதனால் ஆத்திரம் அடைந்த 2 பேரும் அவரை தாக்கி கீழே தள்ளிவிட்டு நகையை பறித்துச் சென்றனர்.

    இந்த தாக்குதலில் காயம் அடைந்த ஜெயந்தி சுப்பிரமணியபுரம் போலீ சில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×