என் மலர்
செய்திகள்
X
திருவண்ணாமலை அருகே வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் மீது கொடூர தாக்குதல்: போலீசார் விசாரணை
Byமாலை மலர்31 May 2017 5:05 PM IST (Updated: 31 May 2017 5:06 PM IST)
திருவண்ணாமலை அருகே வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் மீது மர்மநபர்கள் நடத்திய கொடூர தாக்குதல் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தண்டராம்பட்டு:
திருவண்ணாமலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது இளம்பெண். இவருடைய பெற்றோர் நேற்று முன்தினம் இரவு வெளியூரில் வசிக்கும் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். இளம்பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அப்போது மர்ம நபர்கள் வீடு புகுந்து இளம்பெண்ணை கொடூரமாக தாக்கி விட்டு சென்று விட்டனர். நேற்று காலையில் இளம் பெண்ணின் வீடு திறந்த நிலையிலும், இளம்பெண் அலங்கோலமாக மயங்கிய நிலையிலும் கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அக்கம் பக்கத்தினர் இளம் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வெறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். இளம்பெண் பாலியல் பலாத்கார முயற்சியில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
×
X