search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணிப்பேட்டை அருகே மணல் கடத்திய 6 லாரிகள் பறிமுதல்
    X

    ராணிப்பேட்டை அருகே மணல் கடத்திய 6 லாரிகள் பறிமுதல்

    ராணிப்பேட்டை அருகே மணல் கடத்திய 6 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    வாலாஜா:

    வாலாஜா தாசில்தார் பிரியா, வாலாஜா சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். வன்னிவேடு, புத்தர்மடம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு 8 லாரிகள் மணல் அள்ள தயார் நிலையில் இருந்தது. இதைப் பார்த்த தாசில்தார் பிரியா அங்கு விரைந்து சென்றார்.

    இதை கவனித்த 2 லாரி டிரைவர்கள் லாரியுடன் தப்பி சென்றனர். அவர்களை மடக்கி பிடிக்க முயன்றும் முடியவில்லை. மற்ற டிரைவர்கள் லாரியை அங்கயே விட்டு விட்டு தப்பி ஓடினர்.

    இதையடுத்து, தாசில்தார் பிரியா 6 லாரிகளையும் பறிமுதல் செய்து, ராணிப்பேட்டை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
    Next Story
    ×