என் மலர்
செய்திகள்
X
பண்ணைக்காடு அருகே தோட்டத்தில் தூக்கில் பிணமாக தொங்கிய வாலிபர்
Byமாலை மலர்31 May 2017 9:36 PM IST (Updated: 31 May 2017 9:37 PM IST)
பண்ணைக்காடு அருகே தனியார் தோட்டத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெரும்பாறை:
திண்டுக்கல் அருகே பண்ணைக்காட்டில் இருந்து ஊத்துக்கு செல்லும் மலைச்சாலையில் பண்ணைக்காடு பிரிவுக்கு இடையே ஒரு தனியார் தோட்டம் உள்ளது.
இந்த பகுதியில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு சென்று பார்த்த போது ஒரு மரத்தில் தூக்குபோட்டு வாலிபர் ஒருவர் பிணமாக தொங்கினார். அவர் உடல் அழுகிய நிலையில் இருந்தது.
இதுகுறித்து தாண்டிக்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அங்கு போலீசார் விரைந்து வந்தனர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
அவர் ஜீன்ஸ் பேண்ட், நீல நிற பனியன் அணிந்து இருந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் குறித்து தாண்டிக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X