என் மலர்
செய்திகள்
X
மார்த்தாண்டம் அருகே தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்31 May 2017 10:14 PM IST (Updated: 31 May 2017 10:14 PM IST)
மார்த்தாண்டம் அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில்:
மார்த்தாண்டம் மேலக்குளம் பகுதியை சேர்ந்தவர் லாரன்ஸ் (வயது 36). தொழிலாளி. இவருக்கு குடிபழக்கம் இருந்துள்ளது. இதனால் அவருக்கு கடன் தொல்லை ஏற்பட்டுள்ளது. இதில் மன வருத்தத்தில் இருந்துள்ளார்.
சம்பவத்தன்று மனைவி வேலைக்கு சென்று இருந்தார். லாரன்ஸ் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். வேலைக்கு சென்ற மனைவி திரும்பி வந்தபோது கணவர் லாரன்ஸ் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜுணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ் பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story
×
X