என் மலர்
செய்திகள்
X
திருவள்ளூர் இ-சேவை மையத்தில் ‘ஸ்மார்ட்’ ரேசன் கார்டு: மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்
Byமாலை மலர்22 Jun 2017 12:32 PM IST (Updated: 22 Jun 2017 12:32 PM IST)
திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில் இ- சேவை மையத்தில் பயனாளிகளுக்கு ஸ்மார்ட் ரேசன் கார்டினை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி வழங்கி தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர்:

பின்னர் அவர் அங்கு அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் கார்டு மைய கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டார்.
தமிழக அரசின் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் மூலம் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் குடும்ப அட்டைக்கு பதிலாக புதிய ஸ்மார்ட் கார்டு கடந்த 01.04.2017 முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக தற்போது அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் இ-சேவை மையங்களின் மூலமாக புதிய ஸ்மார்ட் கார்டுகளை அச்சடித்து வழங்கும் பணியையும் அறிமுகப்படுத்தி, 20.06.2017 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இது தவிர்த்து ஏற்கனவே பெறப்பட்ட ஸ்மார்ட் கார்டு தொலைந்திருந்தாலோ அல்லது சேதமடைந்து பயன்படுத்த இயலாத நிலையில் இருந்தாலோ, இ-சேவை மையங்களில் ரூ.30 சதவீத கட்டணம் செலுத்தி புதிய மாற்று ஸ்மார்ட் கார்டினையும் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம்.
திருவள்ளுர் மாவட்டத்தில் பகுதி நேர நியாய விலை கடைகள் 524ம், முழு நேர நியாய விலை கடைகள் 597ம் ஆக மொத்தம் 1,121 நியாய விலை கடைகள் செயல்படுகின்றன. இதுவரை இணையதளம் மூலம் புதியதாக குடும்ப அட்டை வேண்டி 6844 விண்ணப்பங்கள் வரப்பெற்றது.
அதில், 1,746 குடும்ப உறுப்பினர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்களும், 443 முகவரி மாற்றம் தொடர்பான விண்ணப்பங்களும் மற்றும் 290 குடும்ப தலைவர் மாறுதலுக்கான விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 42 ஆயிரத்து 365 ஆகும். இதில், இதுவரை 1 லட்சத்து 53 ஆயிரத்து 604 மின்னணு குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு) பெறப்பட்டு, 1 லட்சத்து 18 ஆயிரத்து 791 மின்னணு குடும்ப அட்டைகள் வினியோகம் செய்யப்பட்டது.
இதற்கு பழைய குடும்ப அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ள செல்போன் எண்ணை தெரிவிக்க வேண்டும். அந்த எண்ணிற்கு ஒருமுறை பயன்படுத்தக் கூடிய கடவுச் சொல் (ஒ.டி.பி) எண் அனுப்பப்படும். அந்த கடவுச் சொல்லைப் பயன்படுத்தி புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.
பழைய குடும்ப அட்டையில் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண் தெரியாதவர்களுக்கு இ-சேவை மையங்களில் புதிய ஸ்மார்ட் கார்டு வழங்க இயலாது.
புதிய ஸ்மார்ட் கார்டில் ஏற்கனவே உள்ள விவரங்களை திருத்தம் செய்யும் பணியும் தற்போது இ-சேவை மையங்களில் நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஸ்மார்ட் கார்டில் உள்ள பெயர்களை நீக்குதல், முன்னுரிமை வகைப்பாடு மாற்றம் செய்தல், குடும்பத் தலைவர் பெயரை மாற்றுதல் ஆகிய சேவைகளுக்காக அரசு இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்.
மனு பரிசீலிக்கப்பட்டதும் விண்ணப்பதாரரின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும். குறுஞ்செய்தி கிடைக்கப்ப பெற்ற பிறகு அருகிலுள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் செயல்படும் இ-சேவை மையங்களை அணுகி ரூ.30 கட்டணம் செலுத்தி புதிய மாற்று ஸ்மார்ட் கார்டு பெற்றுக் கொள்ளலாம்.
இது தொடர்பாக நேற்று முதல் மாவட்ட கலெக்டர் அலுவலக முதல் தளத்தில் ஸ்மார்ட் கார்டு தொடர்பான மக்கள் குறை தீர்க்கும், கண்காணிப்பு மற்றும் மைய கட்டுப்பாட்டு அறை ஒன்று துவங்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் மேற்படி கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள 04427662400, 9445038249 என்ற எண்களிலும், இ-மெயில் dso.tvl@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் ஸ்மார்ட் கார்டு தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவர் முத்து, மாவட்ட வழங்கல் அலுவலர் சந்தியா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story
×
X