என் மலர்
செய்திகள்
விருதுநகர் அருகே போலீஸ் ஏட்டு மீது தாக்குதல்; 5 பேர் கைது
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டம், மல்லாங்கிணறு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்ப்பவர் காளிராஜன் (வயது 38). இவர் வலுக்கரொட்டி கிராமத்தில் ரோந்து பணி மேற்கொண்டார்.
அங்குள்ள மறைவிடத்தில் சிலர் சூதாடிக் கொண்டிருந்தனர். அதனை செல்போனில் படம் பிடித்த ஏட்டு காளிராஜன் சூதாட்டக் கும்பலை பிடிக்கவும் முயன்றார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் ஏட்டு காளிராஜனை சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. தாக்குதலுக்குள்ளான காளிராஜன் மயங்கி விழுந்தார்.
ரோந்து பணியில் ஈடுபட்ட மற்றொரு ஏட்டு கருப்பசாமி, போலீஸ்காரர் பரமசிவன் ஆகியோர் அங்கு வந்து மயங்கி கிடந்த காளிராஜனை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்க சிகிச்சை பெறும் ஏட்டு காளிராஜன் சம்பவம் தொடர்பாக மல்லாங்கிணறு போலீசில் புகார் செய்தார்.
போலீசார் விசாரணை நடத்தி சூதாட்டக் கும்பலை சேர்ந்த முனியராஜ், குமார், ராஜ், கருப்பசாமி, இசக்கிமுத்து ஆகியோரை கைது செய்தனர்.