என் மலர்
செய்திகள்
X
கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 12 பேர் அனுமதி
Byமாலை மலர்24 Jun 2017 3:49 PM IST (Updated: 24 Jun 2017 3:49 PM IST)
கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 12 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுதவிர மர்ம காய்ச்சலால் 60 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கோவை:
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் பரவி வருகிறது.
தற்போது தென்மேற்கு பருவ மழை ஒரு சில இடங் களில் பெய்து வருவதால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு ஒரு பெண் பலியானார்.
இதேபோல் டெங்கு காய்ச்சலுக்கு ஒரு கல்லூரி மாணவி இறந்துள்ளார். இதனால் மாவட்ட சுகாதார துறை சார்பில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன. குறிப்பாக மழை நீர் தேங்காதவாறும், கொசுக்கள் உற்பத்தியை தடுத்தும் சுகாதார துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலுக்கென தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சிறப்பு மருத்துவ குழுவினர் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 12 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுதவிர மர்ம காய்ச்சலால் 60 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story
×
X