என் மலர்
செய்திகள்
கோத்தகிரியில் ஊருக்குள் புகுந்த கரடிகளால் பொதுமக்கள் அச்சம்
கோத்தகிரி:
கோத்தகிரி பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருக்கும் கரடிகள் அவ்வப்போது சாலைகளை கடந்து குடியிருப்பு பகுதிகளில் புகுந்து வீதிகளில் சுற்றித்திரிவதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். குறிப்பாக அரவேனு மற்றும் ஜக்கனாரை சேலடா சுற்று வட்டர பகுதிகளில் கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளது.
ஜக்கனாரை கிருஷ்ணர் கோவிலில் நடந்த பூஜையில் பங்கேற்ற பக்தர்கள் கோவிலில் இருந்து வீடுகளுக்கு திரும்பும் போது சாலையில் இருந்து 2 கரடிகள் அவர்களை துரத்தியுள்ளது. இரவு நேரங்களில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் மக்கள் வெளியே வர அஞ்சுகின்றனர்
சேலடா பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி தேயிலை தோட்ட தொழிலாளி தனியார் தேயிலை தோட்டத்தில் இருந்து ஸ்பிங்கிலருக்கு தண்ணீர் போட கிணற்று பகுதியில் உள்ள மோட்டர் ஸ்விச்சை ஆண் செய்ய சென்றார். அப்போது குட்டியுடன் இருந்த கரடியை பார்த்தார். தப்பியோட முயன்றபோது கரடி அவரின் இடது கையை மற்றும் வலது கால் பகுதியில் கடித்தது. அலறல் சத்தம் கேட்டு அருகில் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் ஓடி வந்து கரடி மற்றும் குட்டியை விரட்டியுள்ளார்கள். பின்னர் அவரை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:- கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு தொத்தை மூக்கு பகுதியில் கரடி தாக்கியதில் கணவன், மனைவி உயிர் இழந்நனர். சில தினங்களுக்கு முன் கோத்தகிரி பகுதியில் 4 கரடிகள் நடமாட்டம் இருந்தது. வனத்துறையினர் அவற்றை விரட்டினர்.
கிராம மக்களின் நலன் கருதி அசம்பாவிதம் நடப்பதற்கு முன் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் குட்டியுடன் கரடி நடமாட்டம் இருப்பதால் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுமாறு பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.