search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை: இடிதாக்கி விவசாயி பலி
    X

    டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை: இடிதாக்கி விவசாயி பலி

    டெல்டா மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. மாடு மேய்த்து கொண்டிருந்த விவசாயியை இடி தாக்கியதில் உடல் கருகி பலியானார்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியதையொட்டி டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.

    சம்பா சாகுபடி தொடங்கி உள்ள நிலையில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. இதைதொடர்ந்து நேற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்தது.

    தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, பேராவூரணி, வெட்டிக்காடு, ஈச்சன் விடுதி, அணைக்கரை, நாககுடி ஆகிய இடங்களில் மழை பெய்தது.

    திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, குடவாசல் உள்பட பல இடங்களிலும் நேற்று பரவலாக மழை பெய்தது. இன்றும் மேகமூட்டமாக உள்ளது.

    திருவாரூரில் நேற்று மதியம் இடி-மின்னலுடன் மழை பெய்தது. அப்போது திருவாரூர் அருகே பிலாவடி மூலை என்ற இடத்தில் மாடு மேய்த்து கொண்டிருந்த மொச்சக்குடி மேல தெருவை சேர்ந்த விவசாயி நேதாஜி (வயது 40) என்பவர் இடிதாக்கி உடல் கருகினார். அவரை மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி நேதாஜியின் அண்ணன் தமிழ்மணி கொடுத்த புகாரின் பேரில் வைப்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதேபோல் நாகை மாவட்டத்திலும் நேற்று 2-வது நாளாக மழை பெய்தது. நாகை, வேதாரண்யம், தலைஞாயிறு உள்பட பல இடங்களில் மழை பெய்தது.

    டெல்டா மாவட்டங்களில் நேற்று பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    வேதாரண்யம்-27.4

    திருத்துறைப்பூண்டி-10.2

    திருவாரூர்-7.8

    திருப்பூண்டி-6.2

    தலைஞாயிறு-4.4

    குடவாசல்-3.2

    வெட்டிகாடு-3.2

    நாகை-2.6

    ஈச்சன்விடுதி-2.4

    Next Story
    ×