என் மலர்
செய்திகள்
X
விருதுநகர் அருகே டிராக்டர் மீது கார் மோதி விபத்து - பெண் பலி
Byமாலை மலர்1 Nov 2017 3:31 PM IST (Updated: 1 Nov 2017 3:32 PM IST)
விருதுநகர் அருகே டிராக்டர் மீது கார் மோதிய விபத்தில் பெண் பலியானார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
மதுரையில் இருந்து இன்று காலை கார் திருநெல்வேலி நோக்கி புறப்பட்டது. விருதுநகர்-சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் பட்டம் புதூர்-மருளூத்து இடையே சென்றபோது சாலையின் குறுக்கே டிராக்டர் வந்தது.
இதனை கவனித்த கார் டிரைவர் பிரேக் பிடித்த போதும், கார் வேகமாக டிராக்டர் மீது மோதியது.
இந்த விபத்தில் காரில் வந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
படுகாயம் அடைந்த டிரைவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பலியான பெண் நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தைச் சேர்ந்த ஜாஸ்மின்பேகம் (வயது 31) என தெரிய வந்தது. காரை ஓட்டி வந்த டிரைவர் மேலப்பாளையத்தை சேர்ந்த தமிமுன்அன்சாரி (36) ஆவார்.
விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
×
X