search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துவரிமான் அருகே மினிலாரி கவிழ்ந்து டிரைவர் பலி
    X

    துவரிமான் அருகே மினிலாரி கவிழ்ந்து டிரைவர் பலி

    துவரிமான் அருகே மினிலாரி கவிழ்ந்து டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகமலை புதுக்கோட்டை:

    மதுரை அருகே உள்ள துவரிமான் கீழத்தெருவைச் சேர்ந்த அருணகிரி மகன் கண்ணன் (39) லாரி டிரைவர்.

    இன்று அதிகாலை இவர் மினிலாரியை ஓட்டிக் கொண்டு தேனிக்கு மணல் எடுத்துவர சென்றார்.

    துவரிமான் 4 வழிச் சாலை சந்திப்பு அருகே சென்றபோது மினிலாரி கட்டுப்பாட்டை இழந்தது. உடனே கண்ணன் மினி லாரியில் இருந்து குதித்து தப்பிக்க முயன்றார்.

    அவர் சாலையோரம் இருந்த பள்ளத்தில் குதித்த பேது நிலைத்தடுமாறி, கட்டுப்பாட்டை இழந்த மினிலாரியும் அவர் மீது சரிந்து விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இது குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×