என் மலர்
செய்திகள்
X
மதுரையில் அதிவேகத்தில் சென்ற 21 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்: 12 பேர் கைது
Byமாலை மலர்1 Nov 2017 4:18 PM IST (Updated: 1 Nov 2017 4:18 PM IST)
மதுரையில் அதிவேகமாக சென்ற 21 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்த போலீசார் 12 பேரை கைது செய்தனர்.
மதுரை:
மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் மாநகர் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களை பிடித்து எச்சரித்தனர்.
மேலும் அதிவேகமாக இரு சக்கர வாகனங்களில் வருவோர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. நேற்று சப்-இன்ஸ்பெக்டர்கள் சோமு (விளக்குத்தூண்), சக்திமணிகண்டன் (தெப் பக்குளம்), சரவணன் (கீரைத்துறை), சுந்தர பாண்டியன் (திலகர் திடல்), இந்துமதி (அண்ணாநகர்) மற்றும் போலீசார் தங்கள் சரகத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின் போது அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் வந்ததாக 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் 21 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
வைரமணி (32), அசோக்குமார், சுபாஷ் (27), அருண்பாண்டியன் (24), பிரகாஷ் (22), சவுந் தரபாண்டி (19), ராஜ பாண்டி (20), கணேசன் (19), சூர்யா (19), ஆகாஷ் (16), கார்த்திக் கண்ணன் (24), ராமராஜபிரபு (22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ந்து மாநகர் முழுவதும் போலீசார் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

Next Story
×
X