என் மலர்
செய்திகள்
X
செய்துங்கநல்லூர் அருகே விவசாயி தற்கொலை
Byமாலை மலர்1 Nov 2017 5:15 PM IST (Updated: 1 Nov 2017 5:15 PM IST)
செய்துங்கநல்லூர் அருகே விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செய்துங்கநல்லூர்:
செய்துங்கநல்லூர் அருகே உள்ள கீழ நாட்டார்குளத்தினை சேர்ந்தவர் அந்தோணி (வயது 50). இவருக்கு திருமணமாகி முருகம்மாள் என்ற மனைவியும், குழந்தைகள் உள்ளனர்.கணவன்-மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் சம்பவத்தன்று அந்தோணி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த செய்துங்கநல்லூர் போலீசார் விரைந்து வந்து அந்தோணி உடலை கைப்பற்றி பாளை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் சோமன் ராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
X