search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒக்கி புயல் பாதிப்பில் தமிழக அரசு சரியாக செயல்படவில்லை: தமிழிசை குற்றச்சாட்டு
    X

    ஒக்கி புயல் பாதிப்பில் தமிழக அரசு சரியாக செயல்படவில்லை: தமிழிசை குற்றச்சாட்டு

    ஒக்கி புயல் பாதிப்பில் தமிழக அரசு சரியாக செயல்படவில்லை என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

    அவனியாபுரம்:

    தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமுடன் புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டேன். மின்சாரம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அதனை சீரமைக்கும்பணி நடந்து வருகிறது.

    புயல் பாதித்த பகுதிகளில் இறப்பு குறித்து தவறான தகவல் கூறுகிறார்கள். எதுவும் உண்மை இல்லை.

    ஆக்கப்பூர்வமாக புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் பணிகள் செய்துள்ள எங்கள் கட்சியைப்பற்றி சில அரசியல் தலைவர்கள் கருத்து சொல்வது சரி இல்லை.

    புயல் பாதிப்பு பகுதியில் தமிழக அரசு முன் எச்சரிக்கையோடு இருந்திருக்க வேண்டும்.

    கடலுக்கு மீனவர்கள் எத்தனை பேர் சென்றனர்? என்ற கணக்கு தமிழக அரசிடம் இல்லை. எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர்? என தமிழக அரசு கணக்கீடு செய்யவில்லை. ஒக்கி புயல் பாதிப்பில் தமிழக அரசு சரியாக செயல்படவில்லை.

    ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் நம்பிக்கையுடன் களம் காண்கிறோம். மக்களைப்பற்றி தொலை நோக்கு சிந்தனையில் முன்பு ஆண்ட கட்சியினர் எதுவும் செய்யவில்லை. வைகோ போன்றோர் இந்துத்துவா நுழைய தடை விதிக்கவே தி.மு.க.வுடன் கூட்டு என்று கூறுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×