search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சை அருகே ரவுடி கழுத்தறுத்து கொலை
    X

    தஞ்சை அருகே ரவுடி கழுத்தறுத்து கொலை

    தஞ்சை அருகே ரவுடி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை விளார்ரோடு பைபாஸ் சாலை அருகே உள்ள அன்பு நகரைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மகன் சரவணன் (வயது 40). தஞ்சை பூச்சந்தையில் வேலை பார்த்து வந்தார். இவர் மீது தெற்கு காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது. மேலும் ரவுடிகள் பட்டியலில் இவரது பெயரும் இருந்து வந்தது.

    இந்த நிலையில் சரவணன் தஞ்சை விளார் பைபாஸ் சாலையில் ஒரு கூரை வீட்டு அருகே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், தாலுகா இன்ஸ்பெக்டர் பசுபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்பு சரவணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதைதொடர்ந்து நடத்திய விசாரணையில் சரவனணுக்கும் அவரது உறவினருக்கும் கடந்த சில நாட்களாக சொத்து தகராறு இருந்து தெரியவந்தது.

    இதனால் சொத்து தகராறு காரணமாக சரவணன் தீர்த்து கட்டியிருக்கலாம் என போலீசார் சந்தேகித்து வருகிறார்கள்.

    மேலும் கொலையாளியை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×