search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பெண் பக்தரிடம் பணம் அபேஸ்
    X

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பெண் பக்தரிடம் பணம் அபேஸ்

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பெண் பக்தரிடம் பணம் அபேஸ்

    மதுரை:

    மீனாட்சி அம்மன் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதால் 4 வாயில்களிலும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கடுமையான சோதனைக்கு பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

    மதுரை நாகமலை புதுக்கோட்டை பல்கலை நகரைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மனைவி கருப்பாயி (வயது45).

    இவர் நேற்று மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார். நீண்ட வரிசையில் நின்றிருந்தபோது மர்ம நபர் கருப்பாயி பர்சை அபேஸ் செய்து கொண்டு தப்பினார். சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்து பார்த்தபோது பர்ஸ் திருடு போய் இருந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து கோவில் போலீசில் புகார் செய்தார். அதில் பர்சில் ரூ.49 ஆயிரம் இருந்ததாக குறிப்பிட்டு இருந்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×