என் மலர்
செய்திகள்

X
ஸ்ரீமுஷ்ணத்தில் மேலும் ஒரு கடையின் பூட்டை உடைத்து ரூ.33 ஆயிரம் கொள்ளை
By
மாலை மலர்11 Sept 2018 5:30 PM IST (Updated: 11 Sept 2018 5:30 PM IST)

ஸ்ரீமுஷ்ணம் கடை வீதியில் உள்ள ஒரு கடையில் நேற்று முன்தினம் பூட்டை உடைத்து மர்ம மனிதர் பணத்தை கொள்ளையடித்து தப்பி ஓடிவிட்டார். இந்த பரபரப்பு சம்பவம் அடங்குவதற்குள் அதே கடை வீதியில் உள்ள மேலும் ஒரு கடையில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
ஸ்ரீமுஷ்ணம்:
ஸ்ரீமுஷ்ணம் தெற்கு செங்குந்தர் தெருவை சேர்ந்தவர் செல்வம் (வயது 51). இவர் ஸ்ரீமுஷ்ணம் பழையபோலீஸ் நிலையம் அருகே உள்ள கடைவீதியில் வெளிநாட்டு பணமாற்றம், செல்போன் விற்பனை செய்யும் ஏஜென்சி கடை நடத்தி வருகிறார்.
இரவு செல்வம் தனது கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் நள்ளிரவில் செல்வத்தின் கடைமுன்பு வந்தனர். கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். கல்லா பெட்டியில் இருந்த ரூ.33 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்தனர். பின்னர் அந்த பணத்தை எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசுக்கு செல்வம் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி, சிறப்பு போலீஸ் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்த கடையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தடயங்களை சேகரித்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்த மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர்.
கொள்ளை சம்பவம் பற்றி ஸ்ரீமுஷ்ணம் நகர வர்த்தக சங்க செயலாளர் தங்க பன்னீர் செல்வம் கூறியதாவது:-
ஸ்ரீமுஷ்ணம் கடைவீதியில் தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடப்பது வியாபாரிகள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணனிடம் வலியுறுத்தினோம். கொள்ளை சம்பவங்களை தடுக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்ளை குறித்து வர்த்தக சங்கம் சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்ய உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
×
X