என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
செய்திகள்
![ஆம்பூர் அருகே கல்லால் தாக்கி மூதாட்டி கொலை - போலீசார் விசாரணை ஆம்பூர் அருகே கல்லால் தாக்கி மூதாட்டி கொலை - போலீசார் விசாரணை](https://img.maalaimalar.com/Articles/2018/Nov/201811051555425880_old-woman-murdered-near-Ambur-police-investigation_SECVPF.gif)
X
ஆம்பூர் அருகே கல்லால் தாக்கி மூதாட்டி கொலை - போலீசார் விசாரணை
By
மாலை மலர்5 Nov 2018 3:55 PM IST (Updated: 5 Nov 2018 3:55 PM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
ஆம்பூர் அருகே தலையில் கல்லை போட்டு மூதாட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த உமராபாத் பழைய காலனியை சேர்ந்த ராமர் மனைவி மணியம்மாள் (வயது 60). ஆதரவற்ற நிலையில் இருந்த இவர் அங்குள்ள கூட்டுறவு விற்பனை நிலைய வளாகத்தில் தங்கி வந்தார்.
நேற்று இரவு கூட்டுறவு வளாகத்தில் ரேசன் கடை முன்பு படுத்து தூங்கினார். நள்ளிரவில் மர்ம நபர்கள் அவரது தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்தனர்.
இன்று காலை ரத்த வெள்ளத்தில் மணியம்மாள் இறந்து கிடந்ததை கண்டு அப்பகுதி பொதுமக்கள் திடுக்கிட்டனர். இது குறித்து உமராபாத் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.
ஆம்பூர் டி.எஸ்.பி. சச்சிதானந்தம், இன்ஸ்பெக்டர்கள் பாலசுப் பிரமணி, கோகுல்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற விசாரணை நடத்தினர்.
மோப்ப நாய் சன்னி வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.அது மூதாட்டி கொலையான இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. போலீசார் மணியம்மாள் உடலை கைப்பற்றி ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்டுறவு விற்பனை நிலைய வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன இதன் மூலம் போலீசார் துப்பு துலக்கி வருகின்றனர்.

Next Story
×
X