என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
செய்திகள்
![தாளவாடி அருகே மொபட்-வேன் மோதி கூலி தொழிலாளி பலி தாளவாடி அருகே மொபட்-வேன் மோதி கூலி தொழிலாளி பலி](https://img.maalaimalar.com/Articles/2018/Nov/201811091602038488_Thalavady-near-accident-worker-death_SECVPF.gif)
X
தாளவாடி அருகே மொபட்-வேன் மோதி கூலி தொழிலாளி பலி
By
மாலை மலர்9 Nov 2018 4:02 PM IST (Updated: 9 Nov 2018 4:02 PM IST)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
தாளவாடி அருகே மொபட்-வேன் மோதி கூலி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாளவாடி:
தாளவாடி அருகே உள்ள பிகினாரை என்ற ஊரை சேர்ந்தவர்கள் மாதேவப்பா (வயது 50), பசுவண்ணப்பா (52). கூலி தொழிலாளர்கள்.
அவர்கள் 2 பேரும் இன்று காலை கோடிபுரத்தில் உள்ள கோவிலுக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தனர்.
தர்மபுரம் அருகே சென்ற போது தாளவாடியில் இருந்து பிகினாரை நோக்கி வந்த வேனும், மொபட்டும் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் மொபட்டில் வந்த மாதேவப்பா, பசுவண்ணப்பா ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே மாதேவப்பா பரிதாபமாக இறந்தார். பசுவண்ணப்பாவின் கால் முறிந்தது. அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சாம்ராஜ்நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
X