என் மலர்
செய்திகள்
X
வத்தலக்குண்டு அருகே பஸ் மோதி 2 வாலிபர்கள் பலி
Byமாலை மலர்11 Nov 2018 3:58 PM IST (Updated: 11 Nov 2018 3:58 PM IST)
வத்தலக்குண்டு அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியானார்கள்.
வத்தலக்குண்டு:
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே நூத்துலாபுரத்தை சேர்ந்தவர் முருகேசன் மகன் ஆனந்தகுமார். கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார்.
இவரது உறவினர் முரளிபாபு (வயது21). திண்டுக்கல் அருகே உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு வெளியூரில் இருந்து வந்த உறவினரை அழைப்பதற்காக முரளிபாபு மற்றும் ஆனந்தகுமார் மோட்டார் சைக்கிளில் வத்தலக்குண்டு நோக்கி வந்தனர். பைக்கை முரளிபாபு ஓட்டினார். மல்லணம்பட்டி கண்மாய் அருகே வந்தபோது வத்தலக்குண்டுவில் இருந்து மதுரை சென்ற பஸ் இவர்கள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். ஆனந்தகுமார் மற்றும் முரளிபாபு உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். விபத்தை ஏற்படுத்திய பஸ் நிற்காமல் சென்று விட்டது. இது குறித்து வத்தலக்குண்டு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து 2 பேர் உடலையும் கைப்பற்றி வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி சென்ற பஸ் டிரைவரையும் தேடி வருகின்றனர். 2 வாலிபர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story
×
X