என் மலர்
செய்திகள்
ஸ்டாலின் முதல்வர் கனவு பலிக்காது- ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
கோபி:
தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். ஈரோடு மாவட்டம் கோபி பஸ் நிலையம் அருகே ஓ.பன்னீர்செல்வம் மக்கள் மத்தியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது.-
தி.மு.க. ஆட்சியின் போது எந்த திட்டமும் உருப்படியாக நடக்கவில்லை. 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்ட சேது சமுத்திர திட்டம் வீணானது தான் மிச்சம். ஆனால் முன்னாள் முதல்வர் ஏழை-எளிய மக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்தார். இன்று அந்த வழியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு ஏழை-எளிய மக்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி செயல்படுத்தி வருகிறது.
இப்படி மக்கள் அரசாக திகளும் இந்த அரசை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. தி.மு.க. ஆட்சியில் மின்தடை ஏற்பட்டு மின்சாரம் இல்லாமல் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தார்கள். இன்றும் அதை மக்கள் மறக்க மாட்டார்கள்.
ஆனால் இன்று எங்கும் மின்தடையே கிடையாது. மின்மிகை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகம் மீது தமிழக மக்கள் மீதும் அக்கறை இல்லாத மு.க.ஸ்டாலின் எப்படியாவது முதல்வர் ஆகிவிட வேண்டும் என்று துடிக்கிறார். கனவு காண்கிறார். அவரது முதல்வர் கனவு பலிக்க போவது கிடையாது.
மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நல்லாட்சி நடக்கிறது. அது மீண்டும் தொடர வேண்டும். அதற்கு உங்கள் ஆதரவு வேண்டும்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார். #opanneerselvam #mkstalin