என் மலர்
செய்திகள்
X
கணவருடன் சேர்த்து வைக்க கோரி குழந்தைகளுடன் தர்ணா போராட்டம் நடத்திய ஆசிரியை
Byமாலை மலர்15 April 2019 5:57 PM IST (Updated: 15 April 2019 5:57 PM IST)
கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி தனது குழந்தைகளுடன் ஆசிரியை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பழனி:
பழனி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜா. டாஸ்மாக் கடையில் கண்காணிப்பாளராக உள்ளார். இவரது மனைவி கிரிஜா மணி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கிரிஜா மணி தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த சில மாதங்களாக தனது மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து ராஜா தனியாக வசித்து வந்தார். தனது கணவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போதும் அவர் இணைப்பை துண்டித்துள்ளார்.
சம்பவத்தன்று தனது 2 குழந்தைகளுடன் கணவரின் வீட்டு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என கூறினார்.
இது குறித்து தகவல் அறிந்த பழனி டவுன் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கிரிஜா மணி கூறியதாவது:-
நெய்வேலியைச் சேர்ந்த எனக்கும் ராஜாவுக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த 3 மாதமாக எவ்வித காரணமும் கூறாமல் என்னையும் என் குழந்தைகளையும் விட்டு விட்டு ராஜா அவரது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். அவரது பெற்றோர் பேச்சை கேட்டு எங்களை பார்க்க வர மறுக்கிறார். தனியார் பள்ளியில் பணிபுரியும் நான் குறைந்த வருமானத்தை வைத்து குழந்தைகளை பராமரிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறேன்.
எனவே எனது கணவரை என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்றார். போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் அவர் அங்கிருந்து சென்றார்.

Next Story
×
X