என் மலர்
செய்திகள்
X
மகளுக்கு திருமணம் செய்து வைத்து விட்டு தீக்குளித்து தற்கொலை செய்த பெண்
Byமாலை மலர்12 Sept 2019 3:41 PM IST (Updated: 12 Sept 2019 3:41 PM IST)
வத்தலக்குண்டு அருகே மகளுக்கு திருமணம் செய்து வைத்து விட்டு பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு சங்கிகோவில் தெருவைச் சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி சாந்தி (வயது 45) இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். பாண்டி கடந்த 20 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனையடுத்து சாந்தி வீட்டு வேலை செய்து மகள்களை வளர்த்து வந்தார். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு தனது முதல் மகளுக்கு திண்டுக்கல்லில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 8-ந் தேதி 2-வது மகளுக்கும் திருமணம் செய்து வைத்தார்.
திருமணம் முடிந்த பிறகு மகளை அவரது கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். வீட்டில் தனிமையில் இருந்த சாந்தி தன் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
பூட்டியே கிடந்த அவரது வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வத்தலக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் பிச்சைபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் ஆகியோர் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது சாந்தி உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடலை கைப்பற்றி வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தனது மகள் திருமணத்துக்காக சிலரிடம் கடன் வாங்கி இருந்ததாகவும் இனிமேல் அந்த கடனை எவ்வாறு அடைக்கப் போகிறோம் என்று தெரியாமல் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story
×
X