என் மலர்
செய்திகள்
X
அரக்கோணத்தில் 7 நாய்கள் விஷம் வைத்து சாகடிப்பு - பெண்கள் கதறி அழுததால் பரபரப்பு
Byமாலை மலர்12 Sept 2019 5:25 PM IST (Updated: 12 Sept 2019 5:25 PM IST)
அரக்கோணத்தில் சாப்பாட்டில் விஷம் வைத்து 7 நாய்களை யார் கொன்றார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:
அரக்கோணம் நேருஜி நகர் 4வது தெருவில் வசிப்பவர் ரீட்டா (வயது 32). இவர் வீட்டில் நாய் வளர்த்து வந்தார். மேலும் அந்த பகுதியில் உள்ள 15க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு தினமும் உணவு அளித்து வந்தார். இதனால் இந்த நாய்கள் அனைத்தும் இவர் வீட்டு முன்பே படுத்திருக்கும்.
இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் நாய்களுக்கு விஷம் கலந்த உணவை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை தின்ற 10 நாய்கள் தெருவில் கிடந்து துடித்தன. இதனைக் கண்ட பொதுமக்கள் கால்நடை மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர்.
கால்நடை டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிகிச்சை அளித்தனர்.
இதில் மூன்று நாய்கள் உயிர் பிழைத்தன. 7 நாய்கள் துடிதுடித்து இறந்தன. இதனைக் கண்ட அப்பகுதி பெண்கள் கதறி அழுதனர். அரக்கோணம் நகராட்சி ஊழியர்கள் மூலம் இறந்த நாய்கள் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன.
நாய்களுக்கு விஷம் கொடுத்த நபர் யார் என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தினர்.
மேலும் இது தொடர்பாக அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

Next Story
×
X