என் மலர்
செய்திகள்
X
தனியார் மயத்தை கண்டித்து திருச்சியில் ரெயில்வே தொழிலாளர்கள் போராட்டம்
Byமாலை மலர்23 Oct 2019 5:46 PM IST (Updated: 23 Oct 2019 5:46 PM IST)
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் ரெயில்வே தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது கமிட்டி நகலை தீவைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி:
50 ரெயில் நிலையங்களையும், லாபகரமாக இயங்கும் 150 விரைவு ரெயில்களையும் தனியாரிடம் ஒப்படைக்கும் உத்தரவை உடனே ரத்து செய்ய வேண்டும். 30 வருடத்தை முடித்தவர்களுக்கு கட்டாய ஓய்வு கொடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். தனியார் கம்பெனிகளுக்கு தாரை வார்க்கும் திட்டத்தை கைவிட வேண்டும். அனைவரின் நிரந்தர வேலை வாய்ப்பை பறித்து ஒப்பந்த ஊழியர்களாக்கும் சட்டத்தை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி திருச்சி பொன்மலை ஆர்மிகேட் முன்பு எஸ்.ஆர்.எம்.யூ. துணை பொதுச்செயலாளரும், பொன்மலை பணிமனை கோட்ட பொறுப்பாளருமான எஸ். வீரசேகரன் தலைமை யில் போராட்டம் நடைபெற்றது.
அப்போது தனியார் மயத்துக்கான அமிதாப் காந்த் தலைமையிலான கமிட்டி பரிந்துரை செய்த நகலை தீயிட்டு கொளுத்தினர். இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பொன்மலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Next Story
×
X