என் மலர்
செய்திகள்
X
கல்பாக்கம் அருகே புதுப்பெண் மர்ம மரணம் - போலீசார் விசாரணை
Byமாலை மலர்15 Nov 2019 2:41 PM IST (Updated: 15 Nov 2019 2:41 PM IST)
கல்பாக்கம் அருகே புதுப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாமல்லபுரம்:
கூவத்தூர் அருகே உள்ள கடலூர் கிராமத்தை சேர்ந்தவர் நந்தினி என்கிற சத்தியவாணி (வயது 25). இவருக்கும் நத்தம்மேடு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாலையன் என்பவருக்கும் கடந்த 6 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. பாலையன் மாமியார் வீட்டில் தங்கி இருந்தார்.
நேற்று மாலை வீட்டில் இருந்த சத்தியவாணி தூக்கில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடியபடி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சதுரங்கபட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சத்தியவாணி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதற்கிடையே சத்தியவாணி இறந்தது பற்றி அறிந்ததும் பாலையன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் சத்தியவாணி உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுபற்றி அவர்கள் சதுரங்கபட்டின போலீசில் புகார் தெரிவித்தனர். அதில், சத்தியவாணி சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சத்தியவாணி கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story
×
X