search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    நிலக்கோட்டை அருகே மாட்டு வியாபாரி வி‌ஷம் குடித்து தற்கொலை

    நிலக்கோட்டை அருகே வாட்ஸ்ஆப் மூலம் மனைவிக்கு தகவல் அனுப்பி விட்டு மாட்டு வியாபாரி தற்கொலை செய்தார்.
    நிலக்கோட்டை:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே போலக்காபட்டியைச் சேர்ந்தவர் பிரேம்நாத் (வயது 32). மாட்டு வியாபாரி. இவருக்கு சரண்யா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டதால் பிரேம்நாத் கடும் மன உளைச்சலில் இருந்தார்.

    நேற்று நிலக்கோட்டை அருகே உள்ள ஜங்கால்பட்டி ரிஷி கரடு பகுதியில் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து விட்டு தான் தற்கொலை செய்யப்போவதாக மனைவிக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பினார்.

    இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சரண்யா உறவினர்களோடு சம்பவ இடத்துக்கு சென்றார். அங்கு மயங்கி கிடந்த பிரேம்நாத்தை தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பிரேம்நாத் பரிதாபமாக உயிரிழந்தார்.

    பிரேம் நாத் உடலை நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    Next Story
    ×