என் மலர்
செய்திகள்
நெற்குன்றம் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவன் உள்பட 3 பேர் கைது
போரூர்:
நெற்குன்றம் புவனேஸ்வரி நகரில் இன்று அதிகாலை கோயம்பேடு சப்- இன்ஸ்பெக்டர் பூபதி ராஜ் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் போலீசார் நிற்பதை கண்டதும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் ஆழ்வார் திருநகர் ஜீவா சாலையை சேர்ந்த சூர்யா, நெற்குன்றம் ஜெயராம் நகரைச் சேர்ந்த திலீப்குமார் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவன் என்பதும் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளுக்கு உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை என்பதும் தெரிந்தது.
மேலும் 3 பேரும் கோயம்பேடு, விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இன்று அதிகாலை நெற்குன்றத்தில் மோட்டார் சைக்கிள் திருடி வந்தபோது போலீசில் சிக்கிக் கொண்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அவர்களிடம் இருந்து 6 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான சூர்யா மீது ஏற்கனவே திருட்டு வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.