என் மலர்
செய்திகள்
கோவையில் கடன் தொல்லையால் காண்டிராக்டர் தற்கொலை
கோவை:
கோவை ஒத்தக்கால் மண்டபத்தை சேர்ந்தவர் பாலச்சந்திரன் (57). கட்டிட காண்டிராக்டர். இவர் கடந்த சில மாதங்களாக கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனவேதனை அடைந்த பாலச்சந்திரன்.
சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்து வேலந்தாவளம் பகுதியில் உள்ள கருப்பராயன் கோவில் அருகே சாணி பவுடரைக் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் மருதாசலம் (52). இவர் வடவள்ளியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக இருந்தார். சம்பவத்தன்று அங்கு பணியில் இருந்த மருதாசலம் திடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்...
பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் ராமசாமி (70). இவர் கடந்த சில மாதங்களாக நோயால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை.
இதனால் மனவேதனை அடைந்த ராமசாமி விரக்தி அடைந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.