என் மலர்
செய்திகள்
காலில் காயமடைந்த தம்பியை பிளஸ்-2 தேர்வெழுதும் மையத்துக்கு தூக்கி வந்த சகோதரர்
கும்பகோணம்:
பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2-ந்தேதி முதல் மார்ச் 24-ந்தேதி வரையிலும், 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 4-ந்தேதி முதல் மார்ச் 26-ந் தேதி வரையிலும் மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 27-ந்தேதி முதல் ஏப்ரல் 13-ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளது.
12ம் வகுப்பு பொதுத் தேர்வை மாணவ, மாணவிகள் அப்பகுதி தேர்வு மையங்களில் எழுத உள்ளனர். வினாத்தாள்கள், 6 கட்டுகாப்பு மையங்களில் 24 மணிநேரமும் ஆயுதம் தாங்கிய பாதுகாவலர் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.
இத்தேர்வுப்பணிக்கு ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
தேர்வுகளை கண்காணிக்க கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் தலைமையில் பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து தேர்வு மையங்களிலும் காவல்துறையுடன் இணைந்து நிலையான படை அமைக்கப்பட்டு தேர்வுகளில் எவ்வித முறைகேடு நடைபெறாமல் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கும்பகோணம் அல்அமீன் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு முதல்நாளில் மொழிப்பாடத்தேர்வு எழுத வந்த மாணவர் ஒருவர் வாகன விபத்தில் காயம் ஏற்பட்டதால் நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அந்த மாணவரை அவரது சகோதரர் தூக்கி கொண்டு தேர்வு எழுதும் அலுவலரின் அனுமதியுடன் தேர்வு மையத்தில் விட்டு சென்றார்.
இதைக்கண்ட தேர்வு எழுத வந்த மாணவர்கள் தனது சகோதரனை தேர்வறைக்கு தூக்கி வந்தவரை வெகுவாக பாராட்டினர்.